மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 ஏப் 2022

தமிழகத்தில் மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மின்வெட்டு நிலவி வருகிறது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆலத்தூர், சித்தூர். தொழுதூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக மணிக்கு ஒருமுறை எவ்வித அறிவிப்பும் இன்றி மின் தடை ஏற்படுவதால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுவதால், கொசுக்கடிக்கு மத்தியில் தூக்கம் இல்லாமல் தவிப்பதாகவும் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர் கடுமையாக அவதிப்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் திட்டக்குடி அருகே மணிக்கு ஒருமுறை மின் தடை ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நள்ளிரவில் கையில் தீப்பந்தம் ஏந்திய படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தெருவிளக்கு கம்பங்களிலும் தீப்பந்தங்களை கட்டிவைத்தனர்.

இதேபோல, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட மோளையானூர், வெங்கடசமுத்திரம், பூனையானூர், மெனசி உள்ளிட்ட கிராமங்களில் தொடர்ந்து ஒரு வாரமாக அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மணி நேர மின்சாரம் இல்லாததால் மாணவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் நிலை ஏற்பட்டது. புழுக்கம் காரணமாக பொதுமக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 3வது, நாளாக நேற்று காலை முதல் தொடர் மின்வெட்டு இருந்து வந்தது. சுமார் 8 மணி நேர மின்தடையால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே, மின்வெட்டு காரணமாக மக்களும் விவசாயிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். இதற்கிடையில், தமிழ் நாட்டிற்கு தேவையான நிலக்கரியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 23 ஏப் 2022