பெரம்பலூரில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் கிறிஸ்டியன் கல்வியியல் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (ஏப்ரல் 23 ) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பெரம்பலூர் கிறிஸ்டியன் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
மேற்படி வேலைவாய்ப்பு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு, இன்ஜினீயர், டிப்ளோமா, ஐடிஐ போன்ற படிப்புகள் படித்துள்ள 18 வயதுக்கு மேல் 45 வயதுக்குள் உள்ள வேலை வாய்ப்பற்ற ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 2,500-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்குகிறது. எனவே விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 04328-225362 என்ற தொலைபேசி எண்ணிலும், 9444094325 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
-ராஜ்-