மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 22 ஏப் 2022

மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு: கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!

மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு: கோட்டாட்சியர் அலுவலகம்  முற்றுகை!

கடலூர் மாவட்டத்தில் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியம் தாழநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் தாசில்தார் தனபதி மற்றும் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தாசில்தார் தனபதியிடம் பேசிய கிராம மக்கள், "தாழநல்லூர் கிராமத்தில் உள்ள குளத்தின் கரையோரம் தென்னை, மா, ஆலமரம், அரசமரம், இலுப்பை மரம் என பலவகையான மரங்கள் உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் குளத்தின் கரையோரம் உள்ள அனைத்து மரங்களையும் சிலர் வெட்டி வருகிறார்கள். இதற்கு துணையாக கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செயல்படுவதால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலக சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் அதிக மரங்களை நட வேண்டும் என்று அறிவித்துள்ளது. தமிழக அரசு மரங்களை வெட்டக்கூடாது, ஒரு கோடி புதிய மரக்கன்றுகளை நட வேண்டும் என்று புதிய ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் பொறுப்பற்ற முறையில் குளத்தின் கரையோரம் இடையூறு இல்லாமல் நின்ற மரங்களை வெட்டி அகற்றி வருவது அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

எனவே வருவாய்த் துறையினர் உடனடியாக தலையிட்டு மரங்களை வெட்டாமல் அவற்றை பாதுகாக்க வேண்டும். மரங்களின் மீது வரிசை எண்களை குறித்து பொதுப்பணித் துறையின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும்" என்றனர்.

இது தொடர்பான மனுவையும் கொடுத்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட தாசில்தார் தனபதி இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை ஏற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

-ராஜ்-

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வெள்ளி 22 ஏப் 2022