மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 ஏப் 2022

காஞ்சிபுரம்: மே 3ஆம் தேதி பட்டு சேலைகள் கடையடைப்பு

காஞ்சிபுரம்: மே 3ஆம் தேதி பட்டு சேலைகள் கடையடைப்பு

காஞ்சிபுரம் காந்தி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் பட்டு சேலை உற்பத்தி மூலப்பொருட்கள் 130 சதவிகிதம் விலை உயர்வு குறித்து சி.ஐ.டி.யு. மாநில கைத்தறி சம்மேளன பொதுச் செயலாளர் முத்துக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பட்டு நெசவு தொழில் நெருக்கடி குறித்து விவாதிக்க ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழிற்சங்க அமைப்புகள், ஜவுளி வர்த்தகர்கள், கோறா வர்த்தகர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பட்டு சேலை உற்பத்திக்கு தேவையான கோரா உற்பத்தி விலை குறைப்பு செய்தால் மட்டுமே பட்டு நெசவை காப்பாற்ற முடியும் என பட்டு நெசவாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அனைத்து பட்டு நெசவு உற்பத்தியாளர்களும் ஒன்றிணைந்து ஒரே குரலில் நிலையான விலை நிர்ணயித்தால் இந்தப் பிரச்சினையில் இருந்து தீர்வு காணலாம் என்று கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பின்னர் சி.ஐ.டி.யூ மாநில கைத்தறி சம்மேளன பொதுச் செயலாளர் முத்துக்குமார் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில், “கைத்தறி நெசவுத் தொழிலில் கச்சா பட்டு 130 சதவிகிதம் விலை உயர்வை கண்டித்தும், மூலக்கூறுகள் விலை உயர்வை கண்டித்தும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம், தொழிற்சங்க அமைப்புகள், ஜவுளி வர்த்தகர்கள், கோர பட்டு வர்த்தகர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்ளிட்ட கூட்டமைப்பு சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் காஞ்சிபுரம், ஆரணி, கும்பகோணம், கோயம்புத்தூர், பரமக்குடி உட்பட தமிழகம் முழுவதும் கைத்தறி நெசவு அனைத்து மையங்களில் மே 3ஆம் தேதி பட்டு சேலை விற்பனை கடை அடைப்பு போராட்டம் நடைபெறும். இதற்கான முடிவு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 21 ஏப் 2022