மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஏப் 2022

நூலகத்தில் இயங்கும் ஊராட்சி அலுவலகம்: புதிய கட்டடம் எப்போது?

நூலகத்தில் இயங்கும் ஊராட்சி அலுவலகம்: புதிய கட்டடம் எப்போது?

ஊராட்சி அலுவலகத்துக்கான தனி இடமில்லாமல் நூலகத்தில் இயங்கி வருவதால் பொதுமக்கள் பலரும் அவதிப்படுகின்றனர். எனவே, ஊராட்சிக்கான புதிய கட்டடம் எப்போது கட்டப்படும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி அலுவலகம் பழுதடைந்ததால் அருகில் உள்ள நூலகத்தில் ஊராட்சி அலுவலகம் தற்காலிகமாக இயங்க தொடங்கியது. அன்று முதல் இன்று வரை கடந்த ஐந்து ஆண்டுக் காலமாக நூலகத்திலேயே ஊராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவ மாணவிகள், புத்தகம் வாசிப்பவர்கள் நூலகத்துக்கு வந்து செல்ல முடியாமல் திணறுகின்றனர். நூலகத்தில் உள்ள புத்தகம் அதே கட்டடத்தின் ஓரத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஊராட்சி அலுவலகம் செயல்படும் நூலகக் கட்டடம் மிக சிறிய கட்டடம் என்பதால் தினமும் ஊராட்சி அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்கள் பணிகளை முடித்து செல்வதற்கு மிகவும் தாமதமாகிறது. எனவே உடனடியாக அரசு உரிய நடவடிக்கை எடுத்து நூலகக் கட்டடத்தில் இயங்கும் ஊராட்சி அலுவலகத்துக்குப் புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜ்-

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 20 ஏப் 2022