மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 19 ஏப் 2022

பவானிசாகரில் இருந்து இரண்டாம்போக பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு!

பவானிசாகரில் இருந்து இரண்டாம்போக பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு!

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம்போக பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அணை என்ற பெருமை உடையது பவானிசாகர் அணை. இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் வழியாக ஐந்து மதகுகள் மூலம் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 7,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இதேபோல் பவானி ஆற்றில் ஒன்பது மதகுகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன வாய்க்கால்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகளுக்கும், சென்ன சமுத்திரம் கால்வாய் இரட்டைப்படை மதகுகளுக்கும் பாசனத்துக்காக கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி மதியம் 12 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை சுழற்சி முறையில் 67 நாட்களுக்கு திறக்கப்படும். இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 3,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்த நிலையில், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்காக இரண்டாம்போகத்தின் இறுதிச்சுற்று தண்ணீரான நான்காம் சுற்று தண்ணீர் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு விநாடிக்கு 500 கன அடியாக திறக்கப்பட்டது. இது நேற்று காலை 10 மணிக்கு விநாடிக்கு 2,300 கன அடியாக உயர்த்தப்பட்டது. இந்த இறுதிச் சுற்று தண்ணீர் இம்மாதம் 30ஆம் தேதி வரை திறக்கப்படும்.

நேற்று காலை 10 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.96 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 169 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

-ராஜ்-

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

செவ்வாய் 19 ஏப் 2022