மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 19 ஏப் 2022

அழகர் கோவில் நோக்கி புறப்பட்ட கள்ளழகர்

அழகர் கோவில் நோக்கி புறப்பட்ட கள்ளழகர்

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கும் வைபவத்துக்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப் பெருமாள் கள்ளர் திருக்கோலத்தில் மதுரைக்கு எழுந்தருளினார். பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகர் 16ஆம் தேதி அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் வஸ்திரங்களை அணிந்து கொண்டு பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். தங்க குதிரையில் பவனி வந்த கள்ளழகரை சீர்பாத தூக்கிகள் உள்ளங்கை பாரமாக தூக்கி வைத்து ஆடியது குதிரையில் அழகர் துள்ளிக் குதித்து வருவது போல் இருந்தது.

வைகையில் இறங்கிய அழகரை வண்டியூர் வீரராகவ பெருமாள் எதிர் கொண்டு அழைத்து சென்றார். தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி, தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்குதல் மற்றும் ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நடைபெறாத இந்த நிகழ்ச்சியை காண இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் தசாவதார கோலங்களில் எழுந்தருளிய கள்ளழகரை விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

அதன் பிறகு திருமஞ்சனமான கள்ளழகர் அனந்தராயர் பல்லக்கில் தல்லாகுளம் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் கருப்பண்ணசாமி கோவிலுக்கு வந்ததும் அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதன் பிறகு அவர் அழகர் மலை நோக்கி புறப்பட்டார்.

வழியில் அவுட்போஸ்ட் மாரியம்மன் கோவில், அம்பலக்காரர் மண்டபம், மண்டகப்படிகளிலும் கள்ளழகர் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர். இரவில் மூன்றுமாவடி, மறவர் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மண்டகபடிகளில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். நாளை அதிகாலை அப்பன்திருப்பதி கள்ளந்திரி வழியாக பிற்பகல் அழகர்மலை சென்றடைகிறார் நாளை மறுநாள் கள்ளழகருக்கு உற்சவ சாந்தி நடக்கிறது.

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

செவ்வாய் 19 ஏப் 2022