மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 19 ஏப் 2022

தென்னாப்பிரிக்கா வெள்ளம்: காலநிலை மாற்றம்தான் காரணம்!

தென்னாப்பிரிக்கா வெள்ளம்: காலநிலை மாற்றம்தான் காரணம்!

தென்னாப்பிரிக்காவின் கடற்கரை பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தென்னாப்பிரிக்க நாட்டில் தொடர் வெள்ள பாதிப்பு காரணமாக அந்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதி கடும் சேதமடைந்துள்ளது. தென்கிழக்கு கடற்கரை நகரமான டர்பனில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக வீடுகள், சாலைகள், மருத்துவமனைகள் ஆகியவை கடும் சேதமடைந்துள்ளன.

அதேபோல் கவாசுலு மற்றும் நாடால் பிராந்தியத்தில் வெள்ள அபாயம் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மின் இணைப்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்பு காரணமாக இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர். மேலும், அந்நாட்டில் புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் விழாக்களை மக்களால் வெள்ளம் காரணமாகக் கொண்டாடவில்லை. வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள 35 லட்சம் மக்களை மீட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

உலகின் முன்னணி தொழில்துறை நாடாக தென்னாப்பிரிக்கா விளங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று தாக்கம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் முடங்கி இருந்த நிலையில், தற்போது கொரோனா தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். இந்தச் சூழலில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு அந்நாட்டுக்கு அடுத்த சோதனையாக உருவெடுத்துள்ளது.

இந்த வெள்ள பாதிப்புக்கு காலநிலை மாற்றம்தான் காரணம் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தியப் பெருங்கடல் வெப்பம் காரணமாக தென்னாப்பிரிக்காவின் கடற்கரை பகுதிகளில் அடிக்கடி வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. இதை முன்னெச்சரிக்கையுடன் அணுகவில்லை என்றால் எதிர்காலத்தில் நிலைமை மோசம் அடையும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசா வரும் வாரம் சவுதி அரேபியாவுக்குப் பயணம் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், வெள்ள பாதிப்பு காரணமாக பயணத்தை ஒத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 19 ஏப் 2022