tகள்ளழகர் வைபவம்: 10 லட்சம் பக்தர்கள் கூட்டம்

public

கடந்த 2 ஆண்டுகளாக மதுரையில் சித்திரை திருவிழா கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பின்றி கோவிலுக்குள்ளேயே நடத்தப்பட்டது. சித்திரை திருவிழாவால் களை கட்டும் மதுரை கடந்த 2 ஆண்டுகளாக களைகட்டவில்லை. இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்புடன் சித்திரை திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முதலில் கொண்டாடப்படும் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா, கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் என மதுரை விழாக்கோலம் பூண்டது. மீனாட்சி சுந்தரேசுவரர், கள்ளழகரை தரிசிக்க மதுரை நகரை நோக்கி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

இந்நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை நடந்தது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் மதுரையில் 2 நாட்களாக மழையும் பெய்ததால் வைகை ஆற்றில் தண்ணீர் அதிக அளவு சென்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் நலன் கருதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது யாரும் வைகை ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

கள்ளழகர் வைகை ஆற்றில் இன்று இறங்கிய போது அதை காண 10 லட்சம் பக்தர்கள் திரண்டனர். இதன் காரணமாக அந்த பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி கொண்ட பலரும் மூச்சு விட திணறினர். சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது.

மேலும் 10க்கும் மேற்பட்டோர் கீழே விழுந்து காயம் அடைந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதில் சிகிச்சை பலனின்றி சுமார் 60 வயது மூதாட்டி மற்றும் 40 வயது ஆண் பரிதாபமாக உயிரிழந்தனர்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *