மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 16 ஏப் 2022

கிச்சன் கீர்த்தனா: வெள்ளரி ரிப்பன் சாலட்!

கிச்சன் கீர்த்தனா: வெள்ளரி ரிப்பன் சாலட்!

கோடைக்காலத்தில் தாராளமாகக் கிடைக்கும் இயற்கையின் வரப்பிரசாதங்களுள் வெள்ளரிக்காயும் ஒன்று. இதில் வெள்ளரிப்பிஞ்சுக்கு நிறைய மருத்துவக்குணம் உள்ளது. வெள்ளரிப்பிஞ்சை தொடர்ந்து சாப்பிடுவதால் சிறுநீர் துவாரங்களில் ஏற்படும் தினவு, நீர்ச்சுருக்கு போன்றவை குணமாகும். மேலும், பொதுவாக வெள்ளரிப்பிஞ்சு சாப்பிட்டால் நல்ல பசி உண்டாகும். உஷ்ண வாயுவால் அவதிப்படுவோரும், சிறுநீர் போகாமல் அவதிப்படுவோரும் வயிறு புடைத்துக்கொண்டு அவதிப்படுவோரும் வெள்ளரிக்காயை சாலட் செய்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

என்ன தேவை?

பிஞ்சு வெள்ளரிக்காய் - 2

கறுப்பு மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் - அரை டீஸ்பூன்

பூண்டுப்பொடி - கால் டீஸ்பூன்

நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைச்சாறு - ஒரு டீஸ்பூன்

நறுக்கிய புதினா இலைகள் - ஒரு டீஸ்பூன்

வறுத்த எள் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கசப்புத்தன்மை இல்லாத வெள்ளரிக்காயைச் சிப்ஸ் போல சீவவும். ஒரு பாத்திரத்தில் கறுப்பு மிளகுத்தூள், ரெட் சில்லி ஃப்ளேக்ஸ், பூண்டுப்பொடி, நல்லெண்ணெய், எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்த்து கலக்கவும். பிறகு, வெள்ளரித் துண்டுகள் சேர்த்துக் கலக்கவும். மேலாக எள், புதினா இலைகளைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 16 ஏப் 2022