கூடலூரில் கோடை மழை: தேயிலை மகசூல் அதிகரிக்கும் – விவசாயிகள் நம்பிக்கை!

public

நீலகிரி மாவட்டம், கூடலூரில் கோடை தொடர் மழையால் பச்சை தேயிலை மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கூடலூர் பகுதியில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது. மேலும் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதற்கிடையில் பலத்த மழை பெய்தது. இதைத்தொடர்ந்து வெப்பம் தணிந்து குளிர்ந்த கால நிலை மாறியது.
இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து காலை 10.30 மணி முதல் மாலை 3 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் அடியோடு குறைந்தது.
இதேபோல் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. தொடர்ந்து சில மணி நேரம் மழை பெய்ததால் வனம் மற்றும் விவசாய நிலங்களில் ஈரப்பதத்தின் அளவு அதிகரித்தது. மேலும் வறண்டு கிடந்த நீர்நிலைகளிலும் தண்ணீர் வரத்து காணப்பட்டது. தொடர் மழையால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களும் நிம்மதியடைந்து உள்ளனர்.
இந்த நிலை குறித்து பேசியுள்ள விவசாயிகள், “இந்த ஆண்டில் கோடை மழை பெய்யாமல் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் காபி உள்ளிட்ட விவசாய பயிர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. ஆனால், கோடை மழை தொடர்ந்து பெய்துள்ளதால் தோட்டங்களில் பச்சை தேயிலை மகசூல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மழையால் கோடைக்காலத்தை எளிதாக சமாளிக்க முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
**-ராஜ்**
.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *