xகிச்சன் கீர்த்தனா: வெள்ளரி பனீர் சாண்ட்விச்!

public

வெள்ளரியின் கொழுந்து, பிஞ்சு, காய், பழம், வேர் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது. நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரியைச் சாப்பிடுவதால் தாகம் தணிப்பதோடு, நாவறட்சியைப் போக்கி பசியை உண்டாக்கக்கூடியது. மேலும் சிறுநீர் பிரிவைத் தூண்டுவதோடு இரைப்பையில் ஏற்படும் புண், மலச்சிக்கலைக் குணப்படுத்துகிறது. மலச்சிக்கலுக்காக ஏதேதோ மருந்து சாப்பிடுகிறவர்கள் தினமும் இரண்டு வெள்ளரிக்காய்களை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை இல்லாமல் குடல் சுத்தமாகி விடும். அதற்கு இந்த வெள்ளரி பனீர் சாண்ட்விச் உதவும்.
**என்ன தேவை?**
வெள்ளரிக்காய் – ஒன்று (துருவவும்)
பிரெட் ஸ்லைஸ் – 10
பனீர் துருவல் – ஒரு கப்
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**புதினா சட்னி செய்ய…**
புதினா இலைகள் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 3
வறுத்த வேர்க்கடலை – ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – ஒரு டீஸ்பூன்
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
புதினா சட்னி செய்ய கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்து எடுக்கவும். வெள்ளரிக்காயைத் துருவி, தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுக்கவும். பாத்திரத்தில் வெள்ளரித் துருவலுடன், பனீர் துருவல், புதினா சட்னி, உப்பு சேர்த்து கலக்கவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு, வெண்ணெய் தடவவும். பிறகு, அதன் மீது வெள்ளரிக் கலவையைத் தடவி, மேலே மற்றொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடவும். விரும்பிய வடிவில் நறுக்கி, தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
**[நேற்றைய ரெசிப்பி: வெள்ளரி கேரட் ஊறுகாய்!](https://www.minnambalam.com/public/2022/04/14/2/cucumber-carrot-pickle)**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *