மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 14 ஏப் 2022

78 மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரிக்க டெண்டர்!

78 மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரிக்க டெண்டர்!

சென்னையில் மெட்ரோ ரயில் 2ஆவது திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. உயர்மட்டம் மற்றும் சுரங்கப்பாதையில் ரயில்களை இயக்குவதற்கான வழித்தடங்களை அமைப்பதற்கு தேவையான உபகரணங்கள், சுரங்கம் தோண்டும் எந்திரம் போன்றவை விரைவில் வர உள்ளன. இந்நிலையில் பூந்தமல்லி - கலங்கரைவிளக்கம் இடையேயான மெட்ரோ ரெயில் சேவைக்கு ரயில் பெட்டிகள் தயாரிக்க ‘அல்ஸ்ட்ராம்’ நிறுவனத்திற்கு 78 பெட்டிகள் தயாரிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் மெட்ரோ ரயில் முதல் திட்டத்திற்கான பெட்டிகள் தயாரித்து வழங்கின. தற்போது 2ஆவது திட்டத்திற்கும் குறைந்த அளவில் டெண்டர் கோரியதால் அதற்கு 78 பெட்டிகள் அல்லது 26 மெட்ரோ ரயில்கள் தயாரிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிறுவனம் 3 பெட்டிகள் கொண்ட ரயிலை 2 ஆண்டுக்குள் தயாரித்து வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. ஏற்கனவே டெண்டர் விடப்பட்டு இறுதி செய்யப்பட்ட நிலையில் அதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் புதிதாக டெண்டர் விடப்பட்டு இறுதி செய்யப்பட்டு உள்ளது.

3 பெட்டிகளை உள்ளடக்கிய மெட்ரோ ரயிலின் நீளம் 66 மீட்டர் ஆகும். இதில் 900 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். திட்டம் ஒன்றில் 4 பெட்டிகள் கொண்ட ரயில் தயாரிக்கப்பட்டது. அது 1200 பேர் பயணம் செய்யக் கூடியதாகும். ரயில் பெட்டியின் அளவு குறைவாக இருப்பதால் மேலும் 3 பெட்டிகளை இணைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மாதவரம்-சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூர் வழித்தடங்களுக்கான பெட்டிகள் தயாரிக்க ஒப்பந்தம் போடவில்லை. பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வழித்தடத்திற்கு முன்னுரிமை கொடுப்பதால் இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

வியாழன் 14 ஏப் 2022