மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 12 ஏப் 2022

போலீஸார் முன்னிலையிலேயே மிரட்டினார்கள் - மாணவர் அமைப்பு

போலீஸார் முன்னிலையிலேயே மிரட்டினார்கள் -  மாணவர் அமைப்பு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ராம நவமியை முன்னிட்டு சில நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், இரு குழுக்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 50 முதல் 60 பேர் காயமடைந்தனர்.

இதுபற்றி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவர் மற்றும் பிஎச்டி மாணவியான சரிகா என்பவர் கூறுகையில், “அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் அசைவ உணவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தடை விதிக்க முற்பட்டனர். இதற்கு பிற மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மோதலில் 60 பேர் வரை காயமடைந்து உள்ளனர்” என்று கூறினார்.

இதுபற்றி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தலைவர் ரோகித் குமார் கூறும்போது, “இதில், அசைவ உணவு பற்றிய விவகாரமே இல்லை. ராம நவமியை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி நடத்துவதில் அவர்களுக்கு ஏதோ பிடித்தம் இல்லாமல் இருந்து உள்ளது” என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, சம்பவ பகுதிக்கு போலீஸார் வரவழைக்கப்பட்டனர். இதுகுறித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் தடிகள், பூந்தொட்டிகளை ஆகியவற்றை கொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். போலீஸாரிடம், மாலையில் வன்முறை நிகழக்கூடும் என முன்பே தகவல் தெரிவித்து இருந்தோம். எனினும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “வன்முறை சம்பவம் நடந்த போதுகூட, போலீஸார் முன்னிலையிலேயே அவர்கள் எங்களை மிரட்டினார்கள் ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், போலீஸார் நேற்று அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் அடையாளம் தெரியாத உறுப்பினர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 12 ஏப் 2022