மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஏப் 2022

சீசன் தொடக்கம்: ஊட்டியில் கூடுதல் போலீஸார்!

சீசன் தொடக்கம்: ஊட்டியில் கூடுதல் போலீஸார்!

கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த பிற மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரியில் கடந்த இரண்டு ஆண்டுகள் கோடை சீசன் நடைபெறவில்லை. நடப்பாண்டில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கோடை விழா, கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. பிரபலமான 124ஆவது மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற மே 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.

இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து வருகை புரியும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கோத்தகிரி நேரு பூங்காவில் மே 7, 8ஆம் தேதிகளில் 11ஆவது காய்கறி கண்காட்சி, கூடலூரில் மே 13, 14, 15ஆம் தேதிகளில் 9ஆவது வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி, ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் 14, 15ஆம் தேதிகளில் 17ஆவது ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 28, 29ஆம் தேதிகளில் 62ஆவது பழக் கண்காட்சி நடைபெறுகிறது.

மேலும் தற்போது சமவெளி பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைப்பதால் குளு குளு காலநிலை நிலவும் ஊட்டிக்கு வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதிகம் பேர் வாகனங்களில் வருவதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் கோடை சீசனில் ஊட்டியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த பிற மாவட்டங்களில் இருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கோவையில் ஒரு பட்டாலியன்(அதாவது 35 பேர்) சிறப்பு போலீஸார் மற்றும் நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து தலா ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், போக்குவரத்து போலீஸார் என மொத்தம் 100 பேர் வந்துள்ளனர். அவர்கள் சேரிங் கிராஸ் சந்திப்பு, லவ்டேல் சந்திப்பு, பிங்கர் போஸ்ட், மத்திய பஸ் நிலையம், சுற்றுலா தலங்கள் முன்பு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்னும் சில வாரங்களில் மக்களின் வருகையையொட்டி மேலும் பல போலீஸார் வரவழைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. அவர்கள் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது ஆகியவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

ராஜ்

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

திங்கள் 11 ஏப் 2022