மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஏப் 2022

கோடை மழை: உப்பளங்கள், அறுவடை பணிகள் பாதிப்பு!

கோடை மழை: உப்பளங்கள், அறுவடை பணிகள் பாதிப்பு!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தமிழகம், வடக்கு இலங்கை கடலோர பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் லேசான மழை பெய்தது. நேற்று காலை வரை வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் மதியம் 12.30 மணிக்கு மேல் பரவலாக பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து கனமழையாக மாவட்டம் முழுவதும் பெய்தது.

இதில் திருமருகல் வட்டாரத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வந்த நிலையில் திருக்கண்ணபுரம், கோட்டூர், குத்தாலம் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் சாய்ந்து அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

வேதாரண்யம் அடுத்த அகத்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட கிராமங்களில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு அவ்வப்போது விட்டு விட்டு பெய்த மழையால் ஏற்கனவே 3 முறை உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது நேற்று மதியம் முதல் இன்று காலை வரை பெய்த கனமழையால் 4-வது முறையாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. உப்பளங்களில் மழைநீர் சூழ்ந்து நிற்கிறது என்பதால் மீண்டும் உற்பத்தி தொடங்க 10 நாட்களுக்கும் மேலாகும் என கூறப்படுகிறது. இதனால் உப்பு விலை உயரக் கூடும் என்று கூறப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று மதியத்திற்கு மேல் மயிலாடுதுறை,சீர்காழி, திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு லேசானது முதல் கனமழை வரை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உளுந்து, பயிர் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. இதேப்போல் சீர்காழி பகுதியில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

திங்கள் 11 ஏப் 2022