மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஏப் 2022

சித்திரைத் திருவிழா: கள்ளழகர் இருப்பிடத்தை அறிய ‘டிராக் அழகர்’!

சித்திரைத் திருவிழா: கள்ளழகர் இருப்பிடத்தை அறிய ‘டிராக் அழகர்’!

மதுரை சித்திரைத் திருவிழாவில் அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரை நகருக்குள் வந்து விட்டு திரும்பி செல்லும் வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே கள்ளழகர் எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை அறிந்து பக்தர்கள் அங்கு சென்று பார்க்கும் வகையில் புதிய ஏற்பாடுகளை மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் செய்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், “மதுரை மாவட்ட மக்களின் பாதுகாப்பு வசதிக்காக ‘மதுரை காவலன்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. அந்த காவலன் செயலி மூலம் சித்திரைத் திருவிழாவை எவ்வித சிரமமின்றி கண்டுகளிக்க புதிய வசதி ஏற்படுத்தி உள்ளோம்.அதன்படி மதுரை மக்களின் நலன் கருதி மதுரை காவலன் என்ற செயலியில் ‘டிராக் அழகர்’ (Track Alagar) என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் வருகிற 14ஆம் தேதி அழகர் மலையிலிருந்து புறப்பட்டு மீண்டும் அழகர்கோவில் செல்லும் வரை, அவர் எந்த வழித்தடத்தின் வழியாகச் செல்கிறார், எந்த இடத்தில் இருக்கிறார் என்பதை தங்கள் செல்போனில் மதுரை காவலன் என்ற செயலில் டிராக் அழகர் (Track Alagar) என்ற லிங்க் மூலம் வரும் வரைபடத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இதனால் மக்கள் நேரம் விரயமாவதைத் தடுக்க முடியும் மற்றும் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் குறித்த நேரத்தில் கள்ளழகரை தரிசிக்க முடியும். மேலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமத்தைத் தவிர்த்து கள்ளழகரை பக்தர்கள் தரிசிக்க இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பக்தர்கள் தங்களின் ஆன்டிராய்டு செல்போனில் உள்ள பிளே ஸ்டோரில் இலவசமாக மதுரை காவலன் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கனவே அந்தச் செயலியை வைத்திருப்பவர்கள் அதை அப்டேட் செய்த பின்னர் மதுரை காவலன் செயலில் உள்ள டிராக் அழகர் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மதுரை காவலன் செயலியை இதுவரை 44,000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளார்கள். இந்த செயலி மூலம் 600 புகார்கள் வந்துள்ளது. இது தவிர அந்தச் செயலில் உள்ள லாக்டு ஹோம் வரும் வசதி மூலம் இதுவரை 1,100 தகவல்கள் பெறப்பட்டு போலீஸார் உரிய ரோந்து ஏற்பாடு செய்து கண்காணிக்கப்பட்டுள்ளது. இந்த வசதியானது 2 ஜிசெல்போனிலும் தமிழ் மற்றும் ஆங்கில குறுஞ்செய்தி மூலம் கள்ளழகர் வருகையை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்” என்று விளக்கியுள்ளார்.

முன்னதாக, இந்தத் திருவிழாவையொட்டி கள்ளழகர் மதுரை சென்று திரும்பும் வரை பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 28 உண்டியல்களும் அழகர்கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கள்ளழகர் மதுரை புறப்பாடு நிகழ்ச்சியுடன்போது சுவாமியுடன் 28 உண்டியல்களும் எடுத்து செல்லப்படுகின்றன. ஆங்காங்கே பக்தர்களிடம் காணிக்கை உண்டியல்களில் பெறப்படுகின்றன. பின்னர் கள்ளழகர் மீண்டும் கோயிலுக்கு திரும்பும் போது, உண்டியல்களும் கோயிலுக்குக் கொண்டு வரப்படுகின்றன.

இந்த விழாவில் பங்கேற்கும் பொதுமக்களின் வசதிக்காக குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியின் மூலம் பணிகளை ஒருங்கிணைக்க உதவி கமிஷனர் நிலை அலுவலர் தலைமையில் 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1,500 தூய்மைப் பணியாளர்கள் சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 15 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 4,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

ராஜ்

.

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

திங்கள் 11 ஏப் 2022