மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 ஏப் 2022

கிச்சன் கீர்த்தனா: தர்பூசணி குல்ஃபி

கிச்சன் கீர்த்தனா: தர்பூசணி குல்ஃபி

கோடைக்கு ஏற்ற உணவு எது? அந்தந்தப் பருவ காலங்களில் கிடைக்கும் சீசனல் உணவுகள்தான் சிறந்தவை. உடல் உபாதைகளை ஏற்படுத்தாமலும், சில உடல் உபாதைகளுக்குத் தீர்வாகவும் இருப்பவை இந்த வகை உணவுகளே. அந்த வகையில் கோடைக்காலத்துக்கு ஏற்றது நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி. கொழுப்புச்சத்தே இல்லாத, வைட்டமின் 'ஏ' மற்றும் 'இ' நிறைந்த தர்பூசணி அனைவருக்கும் ஏற்றது. இந்த தர்பூசணியில் குழந்தைகளுக்குப் பிடித்த குல்ஃபி செய்து கோடையைக் கொண்டாடலாம்.

என்ன தேவை?

தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் - 4 கப்

சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்

க்ரீம் - 6 டேபிள்ஸ்பூன்

ரோஸ் சிரப் - 2 டேபிள்ஸ்பூன்

கோகோ பவுடர் - சிறிதளவு

எப்படிச் செய்வது?

க்ரீமை பீட்டரில் (Beater) போட்டு அடிக்கவும். தர்பூசணி, சர்க்கரையை மிக்ஸியில் போட்டு அடிக்கவும். இரண்டையும் கலந்து கோகோ பவுடர், ரோஸ் சிரப் சேர்த்துக் கலந்து குல்பி மோல்டில் ஊற்றி, ‘ஸ்டிக்’கை செருகி, இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் (ஃப்ரீசர் பகுதியில்) வைத்திருந்து, மறுநாள் காலை எடுத்து சுவைக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: தர்பூசணி ஷேக்

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வியாழன் 7 ஏப் 2022