மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 5 ஏப் 2022

வாகனங்களுக்கான சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணம் உயர்வு: பொதுமக்கள் அவதி

வாகனங்களுக்கான சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணம் உயர்வு: பொதுமக்கள் அவதி

சொத்து வரி உயர்வு, சமையல் கியாஸ் விலை உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என அடுத்தடுத்து வரும் உயர்வுகள், கடுமையான நெருக்கடிகளைக் கொடுத்து மக்களைப் பின்னோக்கி தள்ளுவதாக அமைந்துள்ளது. அந்த வரிசையில், நாடு முழுவதும் வாகனப் பதிவு மற்றும் தகுதி சான்றிதழ் புதுப்பிப்பதற்கான கட்டணம் 3 முதல் 10 மடங்கு உயர்ந்துள்ளது.

புதிய கட்டண உயர்வு கடந்த 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 15 வருடங்களுக்கு மேலான கார் வைத்திருப்பவர்கள் வாகனப் பதிவு சான்றிதழைப் புதுப்பிப்பதற்கு 600 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது, அது தற்போது 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கான வாகனப் பதிவு சான்றிதழுக்கான கட்டணம் 300 ரூபாயிலிருந்து இருந்து 1,000 ரூபாயாகவும், ஆட்டோக்களுக்கு 600 ரூபாயிலிருந்து இருந்து 2,500 ரூபாயாகவும், இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 2,500 ரூபாயிலிருந்து, 10,000 ரூபாயாகவும், இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு 5,000 ரூபாயிலிருந்து, 40,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

தகுதி சான்றிதழ் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்து, அதைப் புதுப்பிக்கும் வரையிலான ஒவ்வொரு நாட்களுக்கும் 50 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. 15 வருடங்களுக்கு மேலான வணிக ரீதியான வாகனங்களுக்கும் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 15 வருடங்களுக்கு மேலான வாகனங்களுக்கான பதிவு சான்றிதழ், தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு வாகன ஓட்டிகள், ஆட்டோ டிரைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து, இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

ஏற்கனவே கொரோனாவின் பிடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறிவரும் மக்களுக்கு இந்த விலை உயர்வுகள் மிக பெரிய சோதனைதான். இதுகுறித்து மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி விலை உயர்வு பாரங்களை குறைத்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்காமல் இருக்கும்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

செவ்வாய் 5 ஏப் 2022