மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 ஏப் 2022

பள்ளி முதல்வர் மீது நடவடிக்கைக்கு உத்தரவு!

பள்ளி முதல்வர் மீது நடவடிக்கைக்கு உத்தரவு!

சென்னையில் தனியார் பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில், அப்பள்ளி முதல்வர் மற்றும் பொறுப்பு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஆழ்வார் திருநகரில் இயங்கி வரும் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த தீக்சித் என்ற மாணவன் கடந்த 28ஆம் தேதி பள்ளி வளாகத்தில் வேன் மோதி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், ஓட்டுநர் பூங்காவனம், ஞானசக்தி ஆகியோரை கைது செய்தனர். மேலும், பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளிக்கு நேரடியாக சென்று அங்கு விசாரணை நடத்தி, ஒரு அறிக்கை தயார் செய்து, அதை மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநருக்கு அனுப்பியிருந்தார்.

அதில், பள்ளி வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் 63 வயது நிரம்பிய பூங்காவனம் என்பவரின் அலட்சியத்தால்தான் விபத்து நடந்துள்ளது. வேனில் சிக்கி படுகாயம் அடைந்த மாணவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். அந்த வாகனத்துக்கு தனியாகப் பொறுப்பாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அந்தப் பள்ளிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பி, ஆறு கேள்விகளுக்கு 24 மணி நேரத்தில், பள்ளி வாகன விபத்து குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளருக்கு காவல் துறை நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள 10 கேள்விகளுக்கு 2 நாட்களில் பதில் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கிடையில் தற்போது பள்ளி முதல்வர் மற்றும் போக்குவரத்து குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, இந்த சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட அனைவரும் கைது செய்யப்படும் வரையில் தங்கள் மகனின் உடலை வாங்க மாட்டோம் என்று உயிரிழந்த மாணவனின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதிகாரிகளின் சமரசத்துக்கு பிறகு அவர்கள் உடலை பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

5 நிமிட வாசிப்பு

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

5 நிமிட வாசிப்பு

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

திங்கள் 4 ஏப் 2022