மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 ஏப் 2022

சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி: வயலிலேயே இருப்பு வைக்கும் விவசாயிகள்!

சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி: வயலிலேயே இருப்பு வைக்கும் விவசாயிகள்!

நாமக்கல் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை வயலிலேயே விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை உற்பத்தி, லாரி தொழிலுக்கு அடுத்தபடியாக விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக மோகனூர், வளையப்பட்டி, அரூர், ஆண்டாபுரம், எருமப்பட்டி, வரகூர், பவித்திரம் உள்ளிட்ட பகுதியில் சுமார் 2,500 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2 லட்சம் டன் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.

மூன்று மாத கால பயிர் என்பதால் விவசாயிகள் ஆர்வமுடன் சின்ன வெங்காயம் சாகுபடி செய்தனர். குறிப்பாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சின்ன வெங்காயம் அறுவடை தொடங்கும். ஆனால், தற்போது சின்ன வெங்காயம் ஒரு கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், விவசாயிகளிடம் வியாபாரிகள் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தை ரூ.6 முதல் ரூ.10 வரை மட்டுமே கொடுத்து வாங்குவதால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. இந்த விலை வீழ்ச்சியால் சின்ன வெங்காயம் பயிர் செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

சில இடங்களில் அறுவடை செய்யும் பணிக்கான கூலிக்கு கூட சின்ன வெங்காயம் விற்பது இல்லை. எனவே விவசாயிகள் அறுவடை செய்யாமலேயே வயலில் விட்டு விடுகின்றனர். சில விவசாயிகள் சின்ன வெங்காயத்தை அறுவடை செய்து, தங்களது விவசாய நிலத்திலேயே பட்டறை அமைத்து இருப்பு வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள விவசாயிகள் சிலர், “ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு செய்து சின்ன வெங்காயம் சாகுபடி செய்தோம். ஆனால், உரிய விலை கிடைக்கவில்லை. அதனால்தான் வயலிலேயே இருப்பு வைத்து உள்ளோம். வருகிற மே மாதம் விலை உயரும் என நம்புகிறோம். தற்போது ரூ.300 கூலி கொடுத்தாலும் வேலைக்கு ஆட்கள் வருவது இல்லை. ஒரு கிலோவுக்கு ரூ.30-க்கு மேல் வியாபாரிகள் சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்தால் மட்டுமே உரிய விலை கிடைக்கும். மேலும் அரசு வெங்காயத்துக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்து, விவசாயிகளிடம் இருந்து வாங்கி ஏற்றுமதி செய்தால் நன்றாக இருக்கும்” என்று கூறியுள்ளனர்.

- ராஜ்-

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

திங்கள் 4 ஏப் 2022