மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 ஏப் 2022

கிச்சன் கீர்த்தனா: தர்பூசணி - ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்

கிச்சன் கீர்த்தனா: தர்பூசணி - ஸ்ட்ராபெர்ரி ஜூஸ்

வெயிலைக் கொடுக்கும் இயற்கை, அதை சமாளிக்க உதவும் காய்கனிகளை வாரி வழங்குவதிலும் குறைவைப்பதில்லை. அவற்றில் முக்கிய இடம்வகிப்பது தர்பூசணி. வெயிலின் தாக்கத்திலிருந்து நமக்கு நிவாரணம் அளிக்க, கடைவீதிகளில் குவிந்து கிடக்கும் தர்பூசணியை அப்படியே சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் சுவையான ஜூஸ் தயாரித்து சாப்பிட்டால்... இரட்டை கொண்டாட்டம்தானே. அதற்கு இந்த தர்பூசணி - ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் பெஸ்ட் சாய்ஸ்.

என்ன தேவை?

தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் - 4 கப்

லேசாக தோல் சீவி, நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் - 4 டேபிள்ஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - 4 டீஸ்பூன்

சர்க்கரை சிரப் - 4 டேபிள்ஸ்பூன்

ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு

தர்பூசணித் துண்டுகள் (அலங்கரிக்க) - 10

எப்படிச் செய்வது?

தர்பூசணித் துண்டுகள், ஸ்ட்ராபெர்ரித் துண்டுகள், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சிரப் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அடிக்கவும். ஒரு கண்ணடி டம்ளரில் 2, 3 ஐஸ்கட்டிகளைப் போட்டு மேலே மிக்ஸியில் அடித்த ஜூஸை ஊற்றி, இரண்டு தர்பூசணித் துண்டுகள் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

சர்க்கரை சிரப் தயாரிக்க...

8 டேபிள்ஸ்பூன் சர்க்கரையுடன் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, ஒரு கம்பிப் பதம் வந்ததும் இறக்கினால், சர்க்கரை சிரப் தயார்.

சம்மர் ஸ்பெஷல்... குட்டீஸ் டிப்ஸ்!

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

திங்கள் 4 ஏப் 2022