மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஏப் 2022

திடீரென இறக்கப்பட்ட எண்ணெய்க் குழாய்கள்: பீதியில் கிராம மக்கள்

திடீரென இறக்கப்பட்ட எண்ணெய்க் குழாய்கள்: பீதியில் கிராம மக்கள்

மயிலாடுதுறை நகராட்சிக்கு மிக அருகிலுள்ள கிராமம் கடுவன்குடி. இந்தக் கிராமத்தில் நீடுரைச் சேர்ந்த அமீனுல்லா என்பவருக்குச் சொந்தமாகப் பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. பயிர்ச் சாகுபடி செய்யாமல் வெறுமனே கருவேலங்காடுகளாய் காட்சியளித்த அந்த இடத்தில் கடந்த இரண்டு நாட்களில் 50-க்கும் மேற்பட்ட கன்டெய்னர் லாரிகளில் ராட்சத எண்ணெய்க் குழாய்கள் வந்து இறங்கியுள்ளன. இதைக் கண்டதும் அந்தக் கிராம மக்கள் என்னவென்று தெரியாமல் பீதியில் உறைந்துள்ளனர்.

எண்ணூர் - தூத்துக்குடி இடையே எண்ணெய் எரிவாயு குழாய் அமைக்கும் பணிக்காக இந்த ராட்சத குழாய்கள் இறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அதை ஏற்காத பொதுமக்கள் திடீரென குழாய்களை அப்புறப்படுத்தக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை - மணல்மேடு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தாசில்தார் மகேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீஸார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டம் நடத்தியவர்கள், "இப்படித்தான் ஏற்கெனவே எண்ணெய் நிறுவனம் பெயரில் குழாய்களை இறக்கி வைப்பதும், அதன்பின் ஓஎன்ஜிசி டிரில்லிங் போடுவதும் நிறைய நடந்துச்சு. நாங்க இதுமாதிரி பல தடவை ஏமாந்தும் போயிருக்கோம். எனவே, உடனடியாகக் குழாய்கள் இறக்குவதை நிப்பாட்டுங்க. மறுத்ததால் அதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்" என்று கூறினர்.

பின்னர் உதவி கலெக்டர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி சுமுகத் தீர்வு காண்பது என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

- ராஜ்-

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

ஞாயிறு 3 ஏப் 2022