மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஏப் 2022

கிச்சன் கீர்த்தனா - சம்மர் ஸ்பெஷல்... குட்டீஸ் டிப்ஸ்!

கிச்சன் கீர்த்தனா - சம்மர் ஸ்பெஷல்... குட்டீஸ் டிப்ஸ்!

இன்னும் சில வாரங்களில் பள்ளி குழந்தைகளுக்கு விட்டாச்சு லீவுதான். அதேநேரம் வெயிலின் தாக்கமும் உச்சத்தைத் தொடும். விளையாடப் போகாமல் ஒரேயடியா உட்கார்ந்திருக்கவும் முடியாது. விளையாடவும் போகணும். வெயிலால் ஏற்படும் பிரச்சினையிலிருந்தும் தப்பிக்கணும். என்ன செய்யலாம்?

* காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டுக்குள்ளே விளையாடும் ஆட்டமா பிளான் பண்ணுங்க.

* புற ஊதாக் கதிர்களின் வெப்பத்திலிருந்து தோல்களைக் காக்கணும். எலுமிச்சை, ஆரஞ்சு, புரொக்கோலி, வைட்டமின் சி உணவுகளைச் சாப்பிடுங்க.

* ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் வரை தண்ணீர் குடிச்சே ஆகணும்.

* சாத்துக்குடி, வெள்ளரி, தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கங்க.

* இறுக்கமான உடைகள் வேணாம். மெல்லிய பருத்தி ஆடைகளை அணியுங்க.

* காரமான, அதிகம் எண்ணெய் சேர்ந்த உணவை தூரமா வைங்க.

* ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் இருக்கும் ஆரஞ்சு, கேரட், மாம்பழம், பப்பாளி, கீரைகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கங்க.

* மோர், பதநீர், இளநீர், பானகம், பழச்சாறு என வெளுத்துக்கட்டுங்க. கூல்டிரிங்க்ஸ் வேண்டாவே வேண்டாம்.

* காபி மற்றும் டீ உடம்பில் நீர்வறட்சியை ஏற்படுத்தும். அதையும் ஸ்டாப் பண்ணுங்க.

* வெளியே போகும்போது, கையோடு ஒரு பாட்டில் தண்ணீர் இருக்கட்டும்.

* விளையாடிட்டு வீட்டுக்கு வந்ததும் கை, கால்களை நன்றாகக் கழுவுங்க.

* மரங்கள் மற்றும் மலைமேல் ஏறும் சாகசங்கள் சம்மரில் வேணாம்.

* வியர்வை அதிகமாக வெளியேறி, கிருமிகளால் பாதிப்புகள் உண்டாகாமல் இருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிங்க.

* தொப்பி, கூலிங்கிளாஸ் போட்டு கிட்டா ஸ்டைலாவும் இருக்கும்... பாதுகாப்பாகவும் இருக்கும்.

நேற்றைய ரெசிப்பி: சுரைக்காய் அடை!

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

ஞாயிறு 3 ஏப் 2022