மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 ஏப் 2022

உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு சிறை: உயர் நீதிமன்றம்!

உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு சிறை: உயர் நீதிமன்றம்!

நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதிப்பதே பிரதானமாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் விதிமீறல் கட்டிடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல், கடமை தவறியதாகக் கூறி தணிகைவேலன் என்ற அதிகாரிக்கு மூன்று ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இதை எதிர்த்து தணிகைவேலன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்து, பணிப்பயன் மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டும் என்று 2013ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை மாநகராட்சி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, பதவி உயர்வுக்கான பட்டியலில் தணிகைவேலன் பெயரை பரிசீலிக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் முகமது சபிக் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இடைக்கால உத்தரவுப்படி பதவி உயர்வுக்கு தனது பெயர் பரிசீலிக்கப்படவில்லை என்று தணிகைவேலன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதிகள், விதிமீறல் கட்டிடங்கள் மீதான உள்ளாட்சி அமைப்புகளின் நடவடிக்கையை எதிர்த்து அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு மனுக்கள் மீது நடவடிக்கை கோரிய வழக்குகளில், நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் கருத்தில் கொள்வதில்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளின் செயலுக்கு அபராதம் விதிப்பது இரண்டாவது பட்சமாக தான் இருக்க வேண்டும். சிறை தண்டனை விதிப்பதுதான் பிரதானமாக இருக்க வேண்டும். இதுபோன்ற அதிகாரிகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து, முக்கியத்துவம் இல்லாத பதவிகளில் நியமிக்க வேண்டும்.

இதுவரை நீதிமன்ற உத்தரவுகள் மூலம் அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று தமிழக நகராட்சி நிர்வாகத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கும்போது ஐஏஎஸ் பதவியில் இருக்கக்கூடிய அதிகாரிகள் மட்டத்தில் இருந்து நடவடிக்கையை தொடங்க வேண்டும். அரசிடம் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடு விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பதவியில் நியமிக்கப்படும் அதிகாரிகள், தங்களது பதவியை லஞ்சப் பணம் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய பதவி என்று நினைப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். இந்த பதவிகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் சேர்த்த சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

-வினிதா

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 2 ஏப் 2022