மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஏப் 2022

நாமக்கல்: முட்டை விலை 4 ரூபாயாக நிர்ணயம்!

நாமக்கல்: முட்டை விலை 4 ரூபாயாக நிர்ணயம்!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 410 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 4 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் இடையே முட்டை நுகர்வு குறைந்துள்ளது. இதுவே முட்டை கொள்முதல் விலை குறைய காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு: சென்னை-440, ஹைதராபாத்-350, விஜயவாடா-365, மைசூரு-412, மும்பை-425, பெங்களூரு-410, கொல்கத்தா-420, டெல்லி-360.

சென்னை போன்ற பெருநகரங்களின் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு முட்டையின் விலையின் ரூ.5 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 11 முட்டைகளை மொத்தமாக வாங்கினால் ரூ.50 என்று விற்பனை செய்கிறார்கள்.

கறிக்கோழி கிலோ ரூ.124-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.121 ஆக குறைந்துள்ளது.

- ராஜ்-

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வெள்ளி 1 ஏப் 2022