மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஏப் 2022

தண்ணீர் பற்றாக்குறை: கருகும் பீட்ரூட் - கவலையில் விவசாயிகள்!

தண்ணீர் பற்றாக்குறை: கருகும் பீட்ரூட் - கவலையில் விவசாயிகள்!

உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையால் பீட்ரூட் செடிகள் கருகி வருகிறது. இதனால் மகசூல் பாதிக்கும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

உடுமலை சுற்று வட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சாகுபடி பணிகளுக்கு அணைகள், கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் உதவி புரிந்து வருகிறது. அவற்றுக்கு மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு தென்னை, மா, சப்போட்டா, எலுமிச்சை உள்ளிட்ட நீண்ட கால பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதை தவிர கத்திரி, அவரை, பீட்ரூட், சின்ன வெங்காயம், முட்டைகோஸ், புடலை, கீரை வகைகள் உள்ளிட்ட குறுகிய கால பயிர்களும் மானாவாரியாக தானியங்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாயத்தை அடிப்படைத் தொழிலாகக்கொண்டு எண்ணற்ற கூலித் தொழிலாளர்கள் நாள்தோறும் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட பி.ஏ.பி முதலாம் மண்டல பாசன நிலங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். நீர் இருப்புக்கு ஏற்றவாறு காய்கறிகள், தானியங்கள் சாகுபடி செய்யப்பட்டன. அந்த வகையில் பீட்ரூட் சாகுபடியும் பரவலாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால், உடுமலை பகுதியில் நிலவி வருகின்ற கடும் வெப்பத்தின் காரணமாக காய்கறி பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசியுள்ள விவசாயிகள், "திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஊக்கத்தோடு சாகுபடி பணியில் ஈடுபட்டு வந்தோம். அந்த வகையில் 60 நாட்கள் பயிரான பீட்ரூட் சாகுபடியிலும் கவனம் செலுத்தினோம். இதனால் செடிகளும் நல்ல முறையில் வளர்ந்து வந்ததுடன் செடிகளில் பீட்ரூட் காய்களும் உருவாகி வளர்ந்து வருகிறது. இன்னும் 15 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய நிலையும் உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நிலவுகின்ற வெயில் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.இதனால் செடிகளின் வளர்ச்சி குன்றி விடுவதுடன் விளைச்சலும் பாதிக்கக் கூடிய அபாயம் உள்ளது" என்று கவலையுடன் தெரிவித்தனர்.

- ராஜ்-

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

வெள்ளி 1 ஏப் 2022