மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஏப் 2022

பேப்பர் போர்டு விலையேற்றம்: 50,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்!

பேப்பர் போர்டு விலையேற்றம்: 50,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்!

பேப்பர் போர்டு விலை உயர்வால் 50,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று ஈரோட்டில் நடந்த நூற்பாலைகளில் பயன்படுத்தப்படும் கோன் மற்றும் டியூப்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில், ‘தி இன்டஸ்டரியல் பேப்பர் கோன் அண்ட் டியூப்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம்’ சார்பில் நடந்த கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். கூட்டத்தின் முடிவில் நிருபர்களிடம் பேசிய செயலாளர் குப்புசாமி, "கோன், டியூப்ஸ் செய்வதற்கான பேப்பர் போர்டு விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை பல மடங்கு பேப்பர் விலை உயர்வதால் கோன் மற்றும் டியூப்ஸ் உற்பத்தி செய்ய மிகவும் சிரமமாக உள்ளது. 22,000 ரூபாய்க்கு விற்பனையான ஒரு டன் பேப்பர் போர்டு தற்போது விலை உயர்ந்து 43,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பேப்பர் போர்டு வாங்கி வந்து கோன் தயாரித்து, விலையை உயர்த்தி வழங்கினால் நூற்பாலையினர் வாங்க மறுக்கின்றனர்.

இதனால் நாங்கள் தொழிலை நிறுத்திவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். நூற்பாலையினர் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே, நாங்கள் தொழிலை தொடர முடியும் என்ற நிலையில் உள்ளோம். தமிழகம் முழுவதும் கோன், டியூப்ஸ் உற்பத்தியில் 200 நிறுவனத்தினர் ஈடுபட்டுள்ளோம். தற்போது 30 சதவிகித நிறுவனத்தினர் கோன், டியூப்ஸ் தயாரிப்பதை முற்றிலும் நிறுத்தியுள்ளோம். இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

- ராஜ்-

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

வெள்ளி 1 ஏப் 2022