மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஏப் 2022

வணிக சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.260 உயர்வு!

வணிக சிலிண்டர் விலை ஒரே நாளில் ரூ.260 உயர்வு!

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்ந்து ரூ.2,406க்கு விற்பனை செய்யப்படுகிறது .

கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்துள்ள நிலையில், ஒரேநாளில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.268 அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாதத்திற்கான 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.268.50 உயர்ந்து 2,406 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக சிலிண்டர் டெல்லியில் 2,253 ரூபாய்க்கும், மும்பையில் 2,205 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 2,351 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரின் விலை, ரூ. 346வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இது டீக்கடை மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்ட நிலையில், இந்த மாதம் முதல் தேதியில் எந்தவித மாற்றமுமில்லை. இது சற்று நிம்மதி அளித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு என தொடர்ந்து அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அதேவேளையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தி வரும் நிலையில், தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் போராட்டத்தை அறிவித்துள்ளன.

வினிதா

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

வெள்ளி 1 ஏப் 2022