மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 31 மா 2022

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்!

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துடன் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏப்ரல் 2ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடக்கிறது.

இந்த முகாமில் தனியார் துறை வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை, ஐடிஐ, டிப்ளோமா, தையல் பயிற்சி பெற்றவர்கள் என அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது. எனவே வேலைதேடும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் கல்வி சான்றிதழ்கள் மற்றும் தங்கள் சுய விவரக் குறிப்புடன் கலந்துகொண்டு பயன் பெறலாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.

- ராஜ்-

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 31 மா 2022