மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 31 மா 2022

பைக் ரேஸ்: பெற்றோர்கள் மீது நடவடிக்கை!

பைக் ரேஸ்: பெற்றோர்கள் மீது நடவடிக்கை!

பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டால் அவர்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் இரவு நேரங்களில் பொதுமக்களை அச்சுறுத்தம் வகையில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் பைக் வீலிங்கில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து காவல்துறை பலமுறை எச்சரிக்கை விடுத்தும், இளைஞர்கள் கேட்பதில்லை. பைக் ரேஸை தடுக்க காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது பைக் ரேஸில் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களும் ஈடுபவது அதிகரித்துள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் கடந்த 10 நாட்களில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 2 சிறுவர்கள் உட்பட 37 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பைக் ரேஸிலில் ஈடுபடும் இளைஞர்களிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நன்னடத்தை உறுதிமொழி பத்திரத்தை மீறி இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டால் அவர்களின் பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

-வினிதா

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்! ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் இயக்கம்!

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

3 நிமிட வாசிப்பு

கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைத்ததும் பெய்த மழை!

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

வியாழன் 31 மா 2022