மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 மா 2022

ஹிஜாப் : ஏழு ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

ஹிஜாப் : ஏழு ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின்போது ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை தேர்வு எழுத அனுமதித்த 7 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஹிஜாப் சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த 28ஆம் தேதி முதல் கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாதவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், ஹிஜாப் காரணமாக தேர்வை புறக்கணிப்பவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாது என்று கர்நாடக பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்தது.

கடந்த 28ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஒரு சில மாணவிகள் ஹிஜாபை கழட்டிவிட்டு தேர்வு எழுதிய நிலையில், பலர் ஹிஜாபை கழற்ற மறுப்பு தெரிவித்துவிட்டு, திரும்பி சென்றனர். கர்நாடகா முழுவதும் 8 லட்சத்து 69 ஆயிரத்து 399 மாணவர்கள் தேர்வு எழுத ஹால்டிக்கெட் வழங்கப்பட்டிருந்த நிலையில், 8 லட்சத்து 48 ஆயிரத்து 405 மாணவர்கள் மட்டுமே முதல் நாள் தேர்வை எழுதினர். சுமார் 20 ஆயிரத்து 994 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இதில் எத்தனை பேர் முஸ்லிம் மாணவிகள் என்று தெரியவில்லை.

மேலும், தேர்வு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த சில ஆசிரியர்கள் ஹிஜாப் அணிந்த மாணவிகளை தேர்வு எழுத அனுமதித்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கிய 7 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக டிடிபிஐ (Deputy director of public instruction) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

புதன் 30 மா 2022