மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 29 மா 2022

கீழ்மருவத்தூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு!

கீழ்மருவத்தூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு!

மேல்மருவத்தூரில் உள்ள கீழ்மருவத்தூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு மாதத்தில் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கம் பகுதியில் இருந்து வந்த கீழ்மருவத்தூர் ஏரி கடந்த 2015ஆம் ஆண்டு தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அந்தப் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நெடுங்காலமாக மக்களுக்கு நீராதாரமாக இருந்து வந்த இந்த ஏரி, தற்போது கல்யாண மண்டபம், உணவு விடுதிகள், பேருந்து நிலையம், கார் பார்க்கிங் என முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த 2015ஆம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று (மார்ச் 28) மீண்டும் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது

அதைப் பதிவு செய்த நீதிபதிகள் ஆக்கிரமிப்பை ஒரு மாதத்தில் அகற்றி, அதுகுறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.

-வினிதா

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

செவ்வாய் 29 மா 2022