மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 மா 2022

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது!

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது!

சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் புகார் அளிக்கப்பட்டு, ஒன்பது மாதங்களுக்கு பிறகு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஐஐடியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்க மாநிலம் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் வேதியியல் துறையில் ஆராய்ச்சி பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். அப்போது, உடன் பயிலும் மாணவர் கிங்ஷீக்தேவ் ஷர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோர் அம்மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து, தனது பேராசிரியர் எடமன பிரசாத்திடம் அப்பெண் புகார் அளித்தார். அதற்கு அவர் சாதிய வன்மத்தோடும், குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கத்தோடும் இப்பிரச்சனையை அணுகியுள்ளார்.

தன்னுடைய படிப்பு பறிபோய் விடுமோ என்ற பயத்தில் மாணவி இதை எல்லாம் சகித்து கொண்டு வந்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டில் கிங்ஷீக்தேவ் ஷர்மா இருமுறை அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மாணவி கல்வி வளாகத்திலுள்ள உள்புகார் குழுவிற்கு 2020ஆம் ஆண்டு ஜூலை 17அன்று புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை விசாரணை செய்த உள்புகார் குழு, மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததை உறுதி செய்து, இடைக்கால அறிக்கை ஒன்றை சமர்பித்தது. அதில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் கல்வி வளாகத்திற்குள் வரக் கூடாது என உத்தரவிட்டதாக கூறப்படுகின்றது. ஆனால், அப்போது ஆன்லைன் வகுப்பு என்பதால் அந்த மாணவர்கள் எந்தவித தடையுமின்றி வகுப்பில் கலந்துகொண்டு வந்தனர்.

தொடர்ந்து, மாணவி 2021 மார்ச் 29 அன்று காவல் நிலையத்திற்கும் புகார் மனு அளித்துள்ளார். புகார் அளித்து மூன்று மாதங்கள் கழித்து 2021 ஜூன் 9 அன்று மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் கிங்ஷீக்தேவ் ஷர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ, டாக்டர் ரவிந்திரன், எடமன பிரசாத், நாராயண் பத்ரா, செளர்வ தத்தா, அய்யன் பட்டாசார்யா ஆகிய 8 பேர் மீது 354, 354(b), 354(c) 506(1) ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையில் அனைத்திந்திய மாதர் சங்கத்தினரும், இந்த வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் பிரிவு 376 மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதியாததற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து மாணவியும், மாதர் சங்கத்தினரும் கடந்த 22ஆம் தேதி மாநில மகளிர் ஆணையத்தின் தலைவரை சந்தித்து புகார் அளித்திருந்தார். இதையடுத்து, விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பதாகவும், மாணவிக்கு துணை நிற்போம் எனவும் ஐஐடி நிர்வாகம் தெரிவித்தது.

தொடர்ந்து மயிலாப்பூர் காவல் துணை ஆய்வாளர் தலைமையில் தனிப்படை ஒன்று மேற்கு வங்கத்திற்கு சென்றது. கொல்கத்தாவில் சென்னை ஐஐடியைச் சேர்ந்த முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்ஷூக் தேவ்சர்மாவை கைது செய்து தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் விரைவில் சென்னை அழைத்துவரப்படுவார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-வினிதா

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

திங்கள் 28 மா 2022