மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 மா 2022

சம்மர் ஸ்பெஷல்: நீர்க்காய்களுடன் கோடையைக் குளுமையாக்கலாம்!

சம்மர் ஸ்பெஷல்: நீர்க்காய்களுடன் கோடையைக் குளுமையாக்கலாம்!

கோடை காலம் வந்தாலே, தாகம் தாகம் எனத் தண்ணீரும் பானங்களும் குடித்தே வயிறு நிரம்பிவிடும். ஆனால், உடல் இயங்க, இவை மட்டும் போதாது. வியர்வையால், உடலில் உள்ள தண்ணீரோடு சத்துகளும் வெளியேறிவிடும். இந்தச் சத்துகளை வெறும் தண்ணீராலும் பானங்களாலும் மட்டுமே ஈடு செய்ய முடியாது. இதற்காகவே, இயற்கை நமக்கு நிறைய காய்கறிகளையும், பழங்களையும் அளித்திருக்கிறது.

கோடை காலத்தில் விளையும், அத்தனை காய்கறிகளும் பழங்களும் நீர்ச்சத்து கொண்டவை. புடலங்காய், அவரைக்காய், பூசணிக்காய், பரங்கிக்காய், பீரக்கங்காய், முள்ளங்கி என கோடையில் விளையும் அத்தனை காய்களும், நீர்க்காய்கள் என்பதுதான், இயற்கையின் ரகசியம்.

பீட்ரூட், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, புரொக்கோலி என நம் சமையலறையில் நிறைந்துகிடக்கும் காய்களை, இந்தக் கோடை காலத்தில் சற்றே ஒதுக்கிவைப்போம். நம்மைக் காத்துக்கொள்ள, இயற்கை நமக்கு அளித்திருக்கும் காய்கறிகளைச் சமைப்பதன் மூலம், கோடையைச் சோர்வின்றிக் கடந்துசெல்வோம். நீர்க்காய்களில், நார்ச்சத்தும் அதிகம் இருக்கும் என்பதால், கோடையில் நீர் இழப்பினால் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இந்தக் காய்கள் நல்ல தீர்வாக இருக்கும்.

புடலங்காய்:

நீர்ச்சத்து, தாது உப்புகள் நிறைந்தது. இதை சமைக்கும்போது பருப்பு சேர்த்தால் புரதமும் மாவுச்சத்தும் சேர்ந்து உடலுக்கு நல்ல எனர்ஜியைத் தரும். மலச்சிக்கல் இருக்காது. நீரிழிவாளர்கள் வளரும் குழந்தைகளுக்கு நல்லது. இதய நோயாளிகள் தேங்காயைக் குறைவாகச் சேர்க்கலாம்.

அவரைக்காய்:

நார்ச்சத்து அதிகம். தாது உப்புகளும், சிறிதளவு பீட்டா கரோட்டினும் இருப்பதால் கண்களுக்கு நல்லது. பருப்பு சேர்த்து சமைக்கும்போது புரதச்சத்தும் கிடைத்துவிடும். வயிற்றுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். மலச்சிக்கல் பிரச்னை வராது.

பூசணிக்காய்:

குளிர்ச்சி தரும் காய்களில் ஒன்று பூசணி. பூசணிக்காயை அரைத்து ஜூஸாக்கி, தயிர் கலந்து, உப்பு போட்டுக் குடித்தால், உடல் சூடு தணியும். இதில், ப்ரோபயோடிக் அதிகம், நல்ல பாக்டீரியாவை வளரச்செய்யும். தாது உப்புகள், நீர்ச்சத்து பூசணியில் அதிகம். உடல் மெலிந்தவர்கள், அசிடிட்டி, எரிச்சல், வயிற்றுவலி, வயிற்றில் பூச்சி, கணைய நோய் இருப்பவர்களுக்கு அடிக்கடி சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது.

பரங்கிக்காய்:

நீர்ச்சத்து, மாவுச்சத்து, சிறிதளவு பீட்டா கரோட்டின் இருப்பதால், கண், தோலுக்கு நல்லது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். அசிடிட்டி இருப்பவர்கள் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கலாம். குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

பீர்க்கங்காய்:

புரதச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புகள் சேர்ந்த சமச்சீரான காய். நல்ல எனர்ஜியைத் தரும். எல்லோரும் சாப்பிடலாம். சிறுநீரகச் செயல் இழப்பு இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.

முள்ளங்கி:

நீர்ச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புகள் அதிகம். கலோரி அளவு மிகக் குறைவு. வயிற்று வலி, அல்சர், மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு ஏற்றது. வெள்ளை முள்ளங்கிக்குப் பதில், சிவப்பு முள்ளங்கி சேர்த்தால் கிட்னி பாதிப்பு உள்ளவர்களும் சாப்பிடலாம்.

நேற்றைய ரெசிப்பி: மோர்க் கற்றாழை!

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

ஞாயிறு 27 மா 2022