மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 மா 2022

இலங்கையில் இருந்து அகதிகள்: குமரியில் தீவிர கண்காணிப்பு

இலங்கையில் இருந்து அகதிகள்: குமரியில் தீவிர கண்காணிப்பு

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகள் வருகை அதிகரித்துள்ளதால் குமரி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் கியூ பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் அந்நாட்டு அரசு தவிக்கிறது. இதனால் அங்கு பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அத்துடன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், ஆடைகள், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் தவித்து வரும் மக்கள் கடல் வழியாக தமிழகத்துக்கு அகதிகளாக வரத் தொடங்கி உள்ளனர். அவ்வாறு அகதிகளாக வந்தவர்களிடம் கியூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபோல் கடல்வழியாக இலங்கை அகதிகள் பலரும் குமரி மாவட்டத்துக்கு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனால், கடற்கரை பகுதிகளில் கடலோரப் பாதுகாப்பு படை மற்றும் கியூ பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் கோழிப்போர்விளை, பழவிளை, பெருமாள்புரம் மற்றும் ஞாறான்விளை ஆகிய பகுதிகளில் இலங்கை அகதிகள் முகாம்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் புதிதாக யாராவது வந்துள்ளார்களா என போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். மேலும் அரசின் அனுமதி பெற்று வெளியே வீடுகளில் தங்கியுள்ளவர்கள் மற்றும் குடியுரிமை பெற்றவர்கள் வீடுகளையும் கியூ பிரிவு போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

-ராஜ்

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

சனி 26 மா 2022