மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 மா 2022

அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு!

அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு!

பாராசிட்டமால் உள்ளிட்ட 800 மருந்து பொருட்களின் விலை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 10.7% வரை உயர்கிறது என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக மூலப் பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவீனம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டுமென மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.

இந்த கோரிக்கையை ஏற்று, வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% விலை உயர்த்த இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தொற்று நோய், காய்ச்சல், தோல் நோய்கள், இதய நோய்கள், ரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை உயரும்.

அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் பாராசிட்டமால், அசித்ரோமைசின், ஃபெனோபார்பிடோன், சிப்ரோஃப்ளோக்சசின் ஹைட்ரோகுளோரைடு, ஃபெனிடோயின் சோடியம் மற்றும் மெட்ரானிடசோல், இரத்த சோகை எதிர்ப்பு மருந்துகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்பட 800 மருந்துகள் உள்ளன. கொரோனா சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள், ஸ்டியராய்டுகளின் விலையும் அதிகரிக்கும். இந்த மருந்துகளின் விலை 10.7% உயர்கிறது. வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். மருந்துகள் (விலை கட்டுப்பாடு) ஆணை, 2013 இன் விதிகளின்படி, மேல் நடவடிக்கைக்காக இது சம்பந்தப்பட்ட அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வரப்படுகிறது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைத் தொடர்ந்து தற்போது அத்தியாவசிய மருந்துகளின் விலை உயரவுள்ளது.

-வினிதா

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 26 மா 2022