மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 மா 2022

நாடு தழுவிய போராட்டம்: ஆட்டோ தொழிற்சங்கம் ஆதரவு!

நாடு தழுவிய போராட்டம்: ஆட்டோ தொழிற்சங்கம் ஆதரவு!

மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்துக்கு அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது.

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை எதிர்த்தும் வரும் 28, 29 ஆம் தேதிகளில் நாடு தழுவிய தொழிற்சங்க போராட்டம் நடைபெற உள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகளும், தொழிற் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை, மின்சார துறை எச்சரிக்கை விடுத்துள்ளன. அதுபோன்று அரசு ஊழியர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கக் கூடிய 28, 29 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஆட்டோக்களும் ஓடாது என்று அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், "மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கு இணங்க தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து பேசி இரண்டு நாட்களும் ஆட்டோக்களை இயக்க கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதனால் தமிழகத்தில் 2 நாட்கள் அனைத்து ஆட்டோக்களும் ஓடாது. சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. சென்னையில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன.

தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து பல இடங்களில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறினார்.

வினிதா

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

5 நிமிட வாசிப்பு

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

5 நிமிட வாசிப்பு

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

சனி 26 மா 2022