மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 மா 2022

முத்துகண்ணம்மாளுக்கு உற்சாக வரவேற்பு!

முத்துகண்ணம்மாளுக்கு உற்சாக வரவேற்பு!

பத்மஸ்ரீ விருது பெற்று சொந்த ஊரான விராலிமலைக்குத் திரும்பிய சதிராட்டப் பெண் கலைஞர் முத்துகண்ணம்மாளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

விராலிமலையைச் சேர்ந்தவர் முத்துகண்ணம்மாள். சதிராட்ட கலையில் தேர்ச்சி பெற்றவர். இவர் சதிராட்ட கலையின் கடைசி வாரிசாகவும் தற்போது கருதப்படுகிறார். இந்த நிலையில் மத்திய அரசால் கடந்த ஜனவரி 25ஆம் தேதி அவர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 21ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சதிராட்ட கலைஞர் விராலிமலை முத்துக்கண்ணமாளுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.

இந்த நிலையில் பத்மஸ்ரீ விருது பெற்று விராலிமலைக்குத் திரும்பிய அவருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் விராலிமலை முருகன் கோயில் அடிவாரத்திலிருந்து மேள தாளம் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் காரில் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக அவரை அழைத்துச்சென்றனர். இதில் வழிநெடுகிலும் நின்றிருந்த பொதுமக்கள் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர்.

-ராஜ்

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

5 நிமிட வாசிப்பு

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

5 நிமிட வாசிப்பு

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

வெள்ளி 25 மா 2022