மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 மா 2022

அசைவ உணவகங்களுக்கும் அனுமதி!

அசைவ உணவகங்களுக்கும் அனுமதி!

நீண்ட தூரம் செல்லும் அரசு பேருந்துகள் நிற்கும் உணவகங்களில் அசைவ உணவுகளையும் தயாரிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நீண்ட தூரம் செல்லும் அரசு பேருந்துகளை நிறுத்துவதற்கான ஒப்பந்தங்கள் கோரும் உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 30 நிபந்தனைகளை விதித்தது. அதில், உணவகங்களில் சைவ உணவு மட்டுமே தயாரிக்க வேண்டும், கழிவறை சுத்தமாக இருக்க வேண்டும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

சைவ உணவு தயாரிக்கும் உணவகங்களில் மட்டுமே அரசு பேருந்துகள் நிற்கும் என்ற நிபந்தனைக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உணவு உரிமையில் தலையிடுவதா? என்றும் கேள்வி எழுப்பினர்.

எதிர்ப்பைத் தொடர்ந்து அரசு பேருந்துகள் நிற்கும் உணவகங்களில் சைவ உணவு மட்டுமே தயாரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் நீக்கியது. மேலும், பேருந்து நிற்கும் உணவகங்களில் சைவ, அசைவ உணவுகளை தயாரிக்கலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நிபந்தனைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது.

-வினிதா

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 25 மா 2022