மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 மா 2022

அடிப்படை வசதிகள் இல்லாத சந்தை!

அடிப்படை வசதிகள் இல்லாத சந்தை!

அடிப்படை வசதிகள் இல்லாத நேற்று (மார்ச் 23) நடந்த சேந்தமங்கலம் புதன் சந்தையில் உள் வரி வசூலிக்க வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் புதன் சந்தை மாட்டு வியாபாரத்துக்கு புகழ் பெற்றது. இந்த சந்தைக்கு வியாபாரிகள் வரத்து அதிகம் காணப்பட்டதால் மாடுகள் விலை உயர்ந்தது. கடந்த வாரம் ரூ.25 ஆயிரத்துக்கு விற்ற எருமை மாடு, இந்த வாரம் ரூ.26 ஆயிரத்துக்கும், ரூ.20 ஆயிரத்துக்கு விற்ற பசு மாடு ரூ.21 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. ரூ.10 ஆயிரத்துக்கு விற்ற கன்றுகுட்டிகள் ரூ.11 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது

இந்த சந்தை பகுதியில் உள்வரி, வெளிவரி என இரண்டு வரிகள் வசூலிக்கப்படுகிறது. உள் வரியானது சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவே வசூலிக்கப்படுகிறது. ஆனால் புதன் சந்தையில் வாகனங்களை நிறுத்துவதற்கு மட்டும் அல்ல; மழை பெய்தால் ஒதுங்க கூட இட வசதி கிடையாது.

எனவே உள்வரி வசூலிக்க கூடாது என்று வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த ஆண்டு மாட்டு சந்தைக்கு வரி வசூலிக்கும் ஏலம் இன்று (மார்ச் 24) புதுச்சத்திரம் ஒன்றிய அலுவலகத்தில் நடக்கிறது.

-ராஜ்

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

5 நிமிட வாசிப்பு

பாம்பன் கடலுக்குள் கட்டப்படும் இரண்டு அடுக்கு கட்டடம்!

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

5 நிமிட வாசிப்பு

தூக்கத்தில் வந்த கனவு… ஒரே நாளில் கோடீஸ்வரரான நபர்!

வியாழன் 24 மா 2022