மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 மா 2022

கல்வி கட்டணம்-தனியார் பள்ளிகள் உறுதியளிக்க உத்தரவு!

கல்வி கட்டணம்-தனியார் பள்ளிகள் உறுதியளிக்க உத்தரவு!

கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு நடைபெற்று வந்தது. அதன்பின்பு, தொற்று பரவலுக்கேற்ப ஆன்லைனிலும், நேரடியாகவும் வகுப்புகள் நடைபெற்றன. தற்போது கொரோனா மூன்றாம் அலை வெகுவாக குறைந்துள்ளதால் மழலையர் முதல் பனிரெண்டாம் வகுப்புவரையிலான அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆன்லைன் வகுப்பு நடக்கும்போதே அந்தந்த டேர்ம் கட்டணத்தை தவறாமல் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வந்த தனியார் பள்ளிகள் தற்போது நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டவுடன், கட்டணத்தை கட்டுமாறு மாணவர்களுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தன. கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைப்பது, பெற்றோரை அழைத்து வரச் சொல்லி தரக்குறைவாக பேசுவது போன்ற சம்பவங்களும் நடைபெற்றதாக மாணவர்கள் தரப்பில் குற்றம்சாட்டபட்டது.

இதையடுத்து, கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு இந்த மாத தொடக்கத்தில் பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விட்டிருந்தது.

அந்த உத்தரவை பள்ளிகள் முறையாக பின்பற்றுகிறதா? என்பது குறித்து தனியார் பள்ளிகள் உறுதிமொழி சான்று தர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தல், அவர்களின் பெற்றோர்களை தரக்குறைவாக பேசுதல் போன்ற எந்த செயலும் நடைபெறவில்லை என்று தனியார் பள்ளிகள் உறுதிமொழி சான்று அளிக்க வேண்டும்.

சான்றிதழ் தந்த பின்பு, அந்த பள்ளிகள் மீது ஏதும் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

-வினிதா

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வியாழன் 24 மா 2022