மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 மா 2022

என் கிராமத்துக்கு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்: நிலத்தை தானமாகக் கொடுத்த விவசாயி!

என் கிராமத்துக்கு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்: நிலத்தை தானமாகக் கொடுத்த விவசாயி!

தனது கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கக்கோரி தனக்குச் சொந்தமான 10 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியிருக்கிறார் 74 வயதாகும் விவசாயி ஒருவர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள அம்பலூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். உடல்நிலைப் பாதிப்பு, பிரசவம் என்றால் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டும். பிரசவ வலி ஏற்பட்டுவிட்டால், மருத்துவமனைக்குச் செல்வதற்குள் சில நேரம் பனிகுடம் உடைந்து ஆபத்தான கட்டத்தில் கர்ப்பிணிகளை மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்ல நேரிடுவதால், தங்களது பகுதியில் அரசு சுகாதார மையம் அமைக்க வேண்டும் என ஆட்சியாளர்களிடம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவந்தார்கள் அம்பலூர் கிராம மக்கள்.

இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 74 வயதாகும் விவசாயி தினகரமோகன் ஆரம்ப சுகாதார மையம் அமைப்பதற்காக தனக்குச் சொந்தமான 10 சென்ட் நிலத்தை அரசுக்குத் தானமாக வழங்கியிருக்கிறார். இவர், ஏற்கெனவே அம்பலூர் காவல் நிலையம் அமைப்பதற்காக தனக்குச் சொந்தமான 40 சென்ட் நிலத்தை அரசுக்குத் தானமாக எழுதி கொடுத்தவர். இப்போது, அந்த இடத்தில்தான் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

மருத்துவமனை கட்ட இடம் வழங்கிய விவசாயி தினகரமோகன் இதுகுறித்துப் பேசியபோது, “நான் 17 ஏக்கரில் தென்னை விவசாயம் செய்கிறேன். ஆரம்பத்தில் தேங்காய் வியாபாரத்திலும் ஈடுபட்டிருந்தேன். காலப்போக்கில் வயோதிகம் காரணமாக தேங்காய் வியாபாரத்தைக் கைவிட்டுவிட்டேன். அம்பலூர் பகுதியில் பெரும்பாலும் விவசாயம்தான் செய்கிறார்கள். அடிக்கடி பாம்புக்கடி, விஷ வண்டுகள் கடித்துவிடுகின்றன. அதுமட்டுமின்றி, சாதாரண காய்ச்சல் என்றாலும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குத்தான் ஓடுகிறோம். பிரவச காலத்தில் எங்கள் ஊர்ப் பெண் பிள்ளைகள் சிரமப்படுவதையும் பார்க்க முடியவில்லை.

எங்கள் கிராமத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. அதனால்தான் 10 சென்ட் நிலத்தை எழுதி கொடுத்துள்ளேன். பச்சூர் வட்டார மருத்துவர் அலுவலர் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளேன். நிலம் தானமாக வழங்கப்பட்டிருப்பது குறித்து மேலிடத்தில் கருத்துரை அனுப்பியிருக்கிறார்கள். விரைவில், எங்கள் பகுதிக்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்று நம்புகிறேன்’’ என்றார். நிலத்தை தானமாக வழங்கிய விவசாயி தினகரமோகனை அந்தப் பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்.

-ராஜ்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

புதன் 23 மா 2022