மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 மா 2022

உயர் மின் கோபுரங்கள் மீது ஏறிய விவசாயிகள்!

உயர் மின் கோபுரங்கள் மீது ஏறிய விவசாயிகள்!

விளைநிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி உயர் மின் கோபுரங்கள் மீது ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்கள் வழியாக புதிய மின் வழித்தடம் ஏற்படுத்தப்பட்டு வெளிமாநிலங்களுடன் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக விளைநிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆறு ஒன்றியங்களின் வழியாக சுமார் 145 உயரழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில் உயரழுத்த மின் கோபுரம் அமைக்கும் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இழப்பீடு வழங்குவதில் சம்பந்தப்பட்ட நிறுவனம் பாரபட்சம் காட்டுவதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையை அடுத்த நூக்காம்பாடி கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மின் வாரிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அப்போது விவசாயிகள் சிலர் திடீரென அங்கிருந்த உயர் மின் கோபுரத்தின் மீது ஏறி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த மங்கலம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், தாசில்தார் சுரேஷ் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

-ராஜ்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 23 மா 2022