மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 மா 2022

சம்பள பாக்கி: துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்!

சம்பள பாக்கி: துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்!

சம்பளம் வழங்கப்படாததை எதிர்த்து ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் டெங்கு பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் என 188 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்தப் பணியாளர்களுக்கு கடந்த மாதத்துக்கான சம்பளமும், நடந்து முடிந்த நகராட்சித் தேர்தலில் பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுக்கான சம்பளமும் வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பணியாளர்கள் நகராட்சி நிர்வாகத்தின் செயலைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.

இவர்கள் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த நகராட்சி ஆணையர், நகர்மன்றத் தலைவர், போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் அதற்கான ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தனர்.

இதைத் தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நகரம் முழுக்க இவர்கள் செயல்படாததால் தூய்மையற்றுக் காணப்படுகிறது.

-ராஜ்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 22 மா 2022