மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 மா 2022

விலை வீழ்ச்சி: காலிஃபிளவர்களை டிராக்டர் மூலம் அழிக்கும் விவசாயிகள்!

விலை வீழ்ச்சி: காலிஃபிளவர்களை டிராக்டர் மூலம் அழிக்கும் விவசாயிகள்!

விலை வீழ்ச்சி எதிரொலியால் கோயம்புத்தூர் மாவட்டம் நெகமம் பகுதியில் டிராக்டர் மூலம் காலிஃபிளவர் செடிகளை விவசாயிகள் டிராக்டர் மூலம் அழித்து வருகிறார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டம் நெகமம், சின்னநெகமம், உதவிபாளையம், என்.சந்திராபுரம், வீதம்பட்டி, வி.வேலூர், சாலைப்புதூர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் விளைநிலங்களில் விவசாயிகள் காலிஃபிளவர் சாகுபடி செய்துள்ளனர்.

இங்கு விளையும் காலிஃபிளவர் பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் உள்ள தினசரி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. தற்போது விலை குறைந்துள்ளதால் காலிஃபிளவர்களைப் பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதற்கான காரணம் குறித்து பேசியுள்ள விவசாயிகள், "காலிஃபிளவரை பொறுத்தவரை 65 நாட்களில் காய்ப்பு திறனுக்கு வந்துவிடும். காய்ப்பு திறன் வந்த ஒரு வாரத்தில் அவற்றை பறித்து மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பார்கள்.

தற்போது நெகமம் பகுதியில் விளையும் காலிஃபிளவர்களுக்கு கடந்த சில நாட்களாக கட்டுப்படியான விலை இல்லாததால் காலிஃபிளவர் செடிகள் அனைத்தையும் மாடுகளை விட்டு மேய்ச்சலுக்கு விட்டனர். இன்னும் ஒரு சிலர் டிராக்டரை விட்டு அந்த செடியை காலிஃபிளவருடன் சேர்த்து அழித்து விடுகின்றனர்.

மேலும் காலிஃபிளவர் ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ ரூ.15- க்கு விற்பனையானால்தான் விவசாயிகளுக்குக் கட்டுபடியாகும். குறைந்த விலைக்கு விற்பனை ஆவதால் ஆட்கள் கூலி, வண்டி வாடகை, கமிஷன் போன்றவற்றுக்குக்கூட விலை கிடைப்பதில்லை.

இதனால் தோட்டங்களில் காலிஃபிளவரைப் பறிக்காமல் செடியிலேயே விட்டு அழிக்கும் அவலநிலை உள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் உரிய இழப்பீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரியுள்ளன

-ராஜ்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

செவ்வாய் 22 மா 2022