மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 21 மா 2022

நிறுத்தப்பட்ட ரயில்கள்: ஏப்ரல் 1 முதல் இயக்கம்!

நிறுத்தப்பட்ட ரயில்கள்: ஏப்ரல் 1 முதல் இயக்கம்!

கொரோனா காலக்கட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மீண்டும் இயங்கும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி - புதுச்சேரி (வண்டி எண்:16111) இடையே காலை 4.20 மணிக்கும், மறுமார்க்கமாக புதுச்சேரி - திருப்பதி (16112) இடையே மதியம் 2.55 மணிக்கும் புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படும்.

சூலூர்பேட்டை - நெல்லூர் (06747) இடையே மதியம் 3.50 மணிக்கும், மறுமார்க்கமாக நெல்லூர் - சூலூர்பேட்டை (06748) இடையே மாலை 6.50 மணிக்கும்,

திருவனந்தபுரம் சென்ட்ரல் - நாகர்கோவில் (06433) இடையே காலை 6.50 மணிக்கும், மறுமார்க்கமாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் சென்ட்ரல் (06428) இடையே மாலை 6.20 மணிக்கும்,

மூர்மார்க்கெட் - சூலூர்பேட்டை (06743) இடையே மதியம் 1.15 மணிக்கும், மறுமார்க்கமாக சூலூர்பேட்டை - மூர்மார்க்கெட் (06744) இடையே இரவு 8.45 மணிக்கும் புறப்படும்.

முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

-ராஜ்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

திங்கள் 21 மா 2022