மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 21 மா 2022

வேலூர் கோட்டை அகழியில் மீண்டும் படகு சவாரி!

வேலூர் கோட்டை அகழியில் மீண்டும் படகு சவாரி!

வேலூர் கோட்டை அகழியில் மீண்டும் படகு சவாரி விடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். அதற்கான பணிகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

வேலூர் கோட்டை அழகிய அகழியுடன் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தக் கோட்டையில் பல்வேறு புரதான கட்டடங்கள், வரலாற்று நினைவுகளைப் பறைசாற்றும் இடங்கள் உள்ளன. ஆனால், இந்தக் கோட்டையில் சில இடங்களில் சரியான பராமரிப்பு இல்லாமல் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இது சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் அளவில் இருந்தது. இதனால் வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை, மாநகராட்சி ஆகியவை இணைந்து கோட்டையைத் தூய்மையாக்க ஒட்டுமொத்த தூய்மைப் பணியைத் தொடங்கியுள்ளது.

இந்தப் பணியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்துள்ளார். இதில் காவல் துறை, மாநகராட்சி தூய்மை பணியாளர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரே நாளில் 750 பேர் கோட்டையை தூய்மைப்படுத்தினர். அவர்களுடன் ஆட்சியர், டிஐஜி ஆகியோரும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், “வேலூர் மாநகரப் பகுதிகளிலும், வேலூர் மாவட்டப் பகுதிகளிலும் வாரம் ஒருமுறை பணியாளர்கள் அனைவரையும் வைத்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும். அன்றாடம் நடைபெறும் பணிகளை காட்டிலும் இந்தப் பணி சிறப்புமிக்க பணியாகும்.

முதல்கட்டமாக வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டையில் இருந்து இந்தப் பணி தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் நம்முடைய ஊரையும், நம்முடைய ஊரை சுற்றியுள்ள பகுதியையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

ஏற்கனவே வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை, அதைச் சுற்றியுள்ள பகுதிகள், கோட்டையின் உட்புற பகுதிகளைத் தூய்மைப்படுத்த மாவட்ட அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் காரணமாக அந்தக் குழு தங்களது பணிகளைச் செய்ய இயலவில்லை.

அடுத்த ஓராண்டு காலத்துக்குள் வேலூர் கோட்டை ஒரு சிறந்த சுற்றுலா தலமாகவும், வரலாற்று சிறப்புமிக்க இடமாகவும், பொதுமக்கள் வந்து செல்லக்கூடிய இடமாக மாற்றப்படும். கோட்டை அகழியில் மீண்டும் படகு சவாரி விடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.

-ராஜ்

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

3 நிமிட வாசிப்பு

27 வருடங்களாக ஒருநாள் கூட தவறாமல் பணியாற்றிய ஊழியர்!

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த ...

3 நிமிட வாசிப்பு

ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

4 நிமிட வாசிப்பு

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரர்களின் வாழ்நாள் சான்றிதழ்!

திங்கள் 21 மா 2022