கிச்சன் கீர்த்தனா: சம்மர் ஸ்பெஷல் – கோடையைக் குளுமையாக்க…

public

ோடை வந்தாச்சு… வெயில் காலத்தில் சோர்வு, தாகம், பித்தம், சருமச் சுருக்கம், வேர்க்குரு, தோல் கறுத்துப் போவது, முகப்பரு, பசியின்மை, டயரியா, உடம்பில் நீர்ச்சத்து வற்றிப் போவது போன்ற பாதிப்புகள் அதிகமாக இருக்கும். இந்த கோடையில் மனமும் உடலும் குளுமையாக… இதையெல்லாம் செய்யுங்கள்… புத்துணர்ச்சியுடன் நடைபோடுங்கள்.
• தாகம் எடுத்தால் உடனே தண்ணீர் அருந்தவும். ‘அப்புறமா குடிச்சுக்கலாம்’ என்று தள்ளிப்போட வேண்டாம். மண்பானைத் தண்ணீர் மிக நல்லது.
• இயற்கை அந்தந்த காலநிலைக்கு உடலின் தேவைக்கு ஏற்பவே சீசனல் பழங்கள் மற்றும் காய்கறிகளை விளைவிக்கிறது. எனவே, ஒவ்வொரு சீசனிலும் அந்த சீசனுக்குரிய பழத்தை அதிகளவில் சாப்பிடவும்.
• இந்த சீசனில் அதிகம் கிடைக்கும் மாம்பழத்தை, சூடு என்று சொல்லி சிலர் ஒதுக்குவார்கள். வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்ற பாதிப்பு இருப்பவர்களைத் தவிர, மற்றவர்கள் தாராளமாக மாம்பழம் சாப்பிடலாம்.
• வெயிலால் தலை முழுவதும் வியர்த்து அதனால் வரும் ஜலதோஷத்துக்கு எண்ணெய்க் குளியல் பெஸ்ட் சாய்ஸ். தலையுடன் உடம்புக்கும் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு குளிக்கலாம்.
• பச்சையாகச் சாப்பிடக்கூடிய வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை நொறுக்குத் தீனிகளுக்குப் பதில் சாப்பிடலாம்.
• கார்பன் டை ஆக்ஸைடு அடைத்த குளிர்பானங்கள் உடம்பின் எரிச்சலை இன்னும் அதிகரிக்கவே செய்யும். அவற்றைத் தவிர்த்து ஃபிரெஷ் ஜூஸ், நீர் மோர் போன்றவற்றை ஐஸ் சேர்க்காமல் குடிப்பது உடம்பையும் சருமத்தையும் குளிர்ச்சியாக்கும்.
* கடைகளில் விற்கப்படும் பழச்சாறுகளைத் தவிர்ப்பது நல்லது. விரும்பினால், வீட்டிலேயே மிகக் குறைந்த அளவு சர்க்கரை சேர்த்துத் தயாரித்து அருந்தலாம். பழத்தின் நன்மை முழுமையாகக் கிடைக்க அப்படியே சாப்பிடுவது சிறந்தது.
* கொதிக்கவைத்த நீரில் வெள்ளரிக்காய், புதினா சேர்த்து அதில் எலுமிச்சைச் சாறு கலந்து தினமும் அருந்தினால் உடல் வறட்சி தடுக்கப்படும்.

**[நேற்றைய ரெசிப்பி: தக்காளி சிக்கன் ஃப்ரை](https://www.minnambalam.com/public/2022/03/19/1/tomato-chicken-fry)**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *