மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 மா 2022

கொரோனா தடுப்பு நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை!

கொரோனா தடுப்பு நடவடிக்கை: மத்திய அரசு எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 2500 என்ற அளவில் குறைந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 149 ஆக குறைந்துள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு 70ஆக குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த நான்கு நாட்களாக கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை.

கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால், அந்தந்த மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை அளித்து வருகின்றன. தமிழ்நாட்டிலும் பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, அனைத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஐரோப்பாவில் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதையடுத்து மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “கொரோனா தொற்று குறைந்து வந்தாலும், அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். பொருளாதார மீட்பு நடவடிக்கைகளினால், தங்கள் பாதுகாப்பை குறைத்துக் கொள்ளக் கூடாது.

பரிசோதனை, தடம் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் ஆகிய ஐந்து தடுப்பு வழிமுறைகளை தொடர்ந்து தீவிரமாக பின்பற்ற வேண்டும்.

தெற்கு ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து கடந்த 16 ஆம் தேதி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், மரபணு சோதனை, தீவிர கண்காணிப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை குறையக் கூடாது. தடுப்பூசி பணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவை குறித்து மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

3 நிமிட வாசிப்பு

தனுஷ் ஐஸ்வர்யா சந்திப்பு?

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: திருமணத்திற்காக பெண்கள் கல்வியைத் தியாகம் செய்ய வேண்டுமா?

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் ...

3 நிமிட வாசிப்பு

பாகிஸ்தானில் மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்வதில் சிக்கல்

வெள்ளி 18 மா 2022